SRI HARINI
Thursday, January 6, 2011
சிவோஹம்! சிவோஹம்!
ஓம் ஓம் ஓம்
சிவோஹம் சிவோஹம் சிவோஹம் சிவோஹம் சிவோஹம் சிவோஹம் .....
மனோ புத்யஹங்கார சித்தா நினாஹம்
ந ச ச்ரோத்ர ஜிஹ்வே ந ச க்ராண நேத்ரே
ந ச வ்யோம பூமிர் ந தேஜோ ந வாயு:
சிதானந்த ரூப: சிவோஹம் சிவோஹம்
மனோ புத்தி அஹங்கார சித்தா நின அஹம்
- நான் மனம், புத்தி, அஹங்காரம், சித்தம் எதுவுமில்லை.
ந ச ச்ரோத்ர ஜிஹ்வே
- நான் காதுகளும் இல்லை; நாவும் இல்லை
ந ச க்ராண நேர்த்ரே
- நான் நாக்கும் இல்லை; கண்களும் இல்லை
ந ச வ்யோம பூமி:
- நான் வானமும் இல்லை; பூமியும் இல்லை
ந தேஜோ ந வாயு:
- நான் ஒளியும் இல்லை; காற்றும் இல்லை
சித் ஆனந்த ரூப: சிவோஹம் சிவோஹம்
- அறிவும் ஆனந்தமும் வடிவாகக் கொண்ட சிவன் நான்; சிவம் நான்.
ந ச ப்ராண சங்க்யோ நவை பஞ்சவாயு:
ந வா சப்த தாதுர் நவா பஞ்சகோச:
ந வா பாணி பாதம் ந சோபஸ்தபாயு:
சிதானந்த ரூப: சிவோஹம் சிவோஹம்
ந ச ப்ராண சங்க்யோ ந வை பஞ்ச வாயு:
- நான் மூச்சால் கட்டுப்பட்டவன் இல்லை; நான் ஐந்துவிதமான காற்றுகளும் இல்லை (ப்ராணன் - உள்ளிழுக்கும் மூச்சு; அபானன் - உடல் அழுக்குகளை வெளியேற்றும் காற்று; சமானன் - உண்டதைச் செரிக்கும் காற்று; உதானன் - உறுப்புகளை நடத்தும் காற்று; வ்யானன் - உடல் செய்கைகளை நடத்தும் காற்று)
ந வா சப்த தாதுர் ந வா பஞ்ச கோச:
- நான் ஏழுவிதமான உடற்பொருட்களும் இல்லை (ரசம், ரத்தம், மாமிசம், கொழுப்பு, எலும்பு, மஜ்ஜை, விந்து/முட்டை); நான் ஐந்துவிதமான போர்வைகளும் இல்லை (அன்னமய கோசம் - உணவால் ஆன போர்வை; ப்ராண மய கோசம் - உயிர்காற்றுகளால் ஆன போர்வை; மனோ மய கோசம் - மனத்தால் ஆன போர்வை; விஞ்ஞான மய கோசம் - அனுபவங்களால் ஆன போர்வை; ஆனந்த மய கோசம் - இன்பத்தால் ஆன போர்வை)
ந வா பாணி பாதம் ந ச உபஸ்த பாயு:
- நான் கைகால்களும் இல்லை; நான் மற்ற உறுப்புகளும் இல்லை
சித் ஆனந்த ரூப: சிவோஹம் சிவோஹம்
- அறிவும் ஆனந்தமும் வடிவாகக் கொண்ட சிவன் நான்; சிவம் நான்.
ந மே த்வேஷ ராகௌ ந மே லோப மோஹௌ
மதோ நைவ மேநைவ மாத்ஸர்ய பாவ:
ந தர்மோ ந ச அர்த்தோ ந காமோ ந மோக்ஷ:
சிதானந்த ரூப: சிவோஹம் சிவோஹம்
ந மே த்வேஷ ராகௌ
- எனக்கு வெறுப்பும் விருப்பும் இல்லை
ந மே லோப மோஹௌ
- எனக்கு பற்றுதலும் மயங்குதலும் இல்லை
மதோ ந ஏவ மே ந ஏவ மாத்ஸர்ய பாவ:
- எனக்கு கருவமும் இல்லை; பொறாமையும் இல்லை
ந தர்ம:
- நான் அறமும் இல்லை
ந ச அர்த்த:
- நான் பொருளும் இல்லை
ந காம:
- நான் இன்பமும் இல்லை
ந மோக்ஷ:
- நான் வீட்டுப்பேறும் இல்லை
சித் ஆனந்த ரூப: சிவோஹம் சிவோஹம்
- அறிவும் ஆனந்தமும் வடிவாகக் கொண்ட சிவன் நான்; சிவம் நான்.
ந புண்யம் ந பாபம் ந சௌக்யம் ந துக்கம்
ந மந்த்ரோ ந தீர்த்தம் ந வேதா ந யக்ஞ:
அஹம் போஜனம் நைவ போஜ்யம் ந போக்தா
சிதானந்த ரூப: சிவோஹம் சிவோஹம்
ந புண்யம் ந பாபம்
- நான் புண்ணியமும் இல்லை பாவமும் இல்லை
ந சௌக்யம் ந துக்கம்
- நான் இன்பமும் இல்லை துன்பமும் இல்லை
ந மந்த்ரோ ந தீர்த்தம்
- நான் மந்திரமும் இல்லை புண்ணிய தீர்த்தமும் இல்லை
ந வேதா ந யக்ஞ:
- நான் வேதமும் இல்லை யாகங்களும் இல்லை
அஹம் போஜனம் ந ஏவ போஜ்யம் ந போக்தா
- நான் உணவும் இல்லை உண்ணும் காரியமும் இல்லை உண்டு அனுபவிப்பவனும் இல்லை (நான் புலனுக்குட்படும் பொருட்களும் இல்லை; புலன்களின் வழி அனுபவிக்கும் செயல்களும் இல்லை; புலன்களின் வழி அனுபவிப்பவனும் இல்லை)
சித் ஆனந்த ரூப: சிவோஹம் சிவோஹம்
- அறிவும் ஆனந்தமும் வடிவாகக் கொண்ட சிவன் நான்; சிவம் நான்.
ந ம்ருத்யுர் ந சங்கா ந மே சாதிபேத:
பிதா நைவ மே நைவ மாதா ச ஜன்மா
ந பந்துர் ந மித்ரம் குருர் நைவ சிஷ்யா:
சிதானந்த ரூப: சிவோஹம் சிவோஹம்
ந ம்ருத்யுர் ந சங்கா
- எனக்கு மரணம் இல்லை; எனக்கு பற்றுதல் இல்லை
ந மே சாதி பேத:
- எனக்கு சாதி பேதங்கள் இல்லை
பிதா ந ஏவ மே ந ஏவ மாதா ச ஜன்மா
- எனக்கு தாய் தந்தையர் இல்லை; எனக்கு பிறப்பும் இல்லை
ந பந்துர் ந மித்ரம்
- எனக்கு உறவுகள் இல்லை; நட்புகள் இல்லை
குருர் ந ஏவ சிஷ்யா
- நான் குருவும் இல்லை சிஷ்யனும் இல்லை
சித் ஆனந்த ரூப: சிவோஹம் சிவோஹம்
- அறிவும் ஆனந்தமும் வடிவாகக் கொண்ட சிவன் நான்; சிவம் நான்.
அஹம் நிர்விகல்போ நிராகாரரூபோ
விபுத்வாச்ஸ சர்வத்ர சர்வேந்த்ரியானாம்
ந ச சங்கடம் நைவ முக்திர் ந மே யா
சிதானந்த ரூப: சிவோஹம் சிவோஹம்
அஹம் நிர்விகல்ப
- நான் மாற்றம் இல்லாதவன்
நிராகாரரூப:
- உருவம் இல்லாதவன்
விபுத்வா ச
- எங்கும் நிறைந்தவன்
சர்வத்ர
- எல்லாம் ஆனவன்
சர்வேந்த்ரியானாம்
- எல்லா உடல்களிலும் வசிப்பவன்
ந ச சங்கடம்
- எனக்கு கட்டுப்பாடுகள் இல்லை
ந ஏவ முக்தி: ந மே யா
- அதனால் எப்போதும் எனக்கு விடுதலை என்பதும் தேவையில்லை
சித் ஆனந்த ரூப: சிவோஹம் சிவோஹம்
- அறிவும் ஆனந்தமும் வடிவாகக் கொண்ட சிவன் நான்; சிவம் நான்.
Newer Posts
Home
Subscribe to:
Posts (Atom)